நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்காக நாசர், விஷால், கார்த்தி போன்றோரால் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஏப்ரல் 17ம் தேதி சேப்பாக்கத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் நாசர் வெளிநாட்டில் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை மேடை நாடகமாக போட திட்டமிட்டுள்ளாராம்.இதில் கண்டிப்பாக ரஜினி, கமல் இணைந்து நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. ரஜினி, கமல் இருவருமே இந்த கதையில் ஆர்வம் கொண்டவர்கள் என்பதால் இதில் அவர்கள் இணைந்து நடிப்பார்கள் என்று தெரிகிறது.