பருத்தி வீரன் படத்தின் முத்தழகு ஆக வாழ்ந்து தேசிய விருது வாங்கியவர் நடிகை ப்ரியாமணி.

தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வந்த இவருக்கு சமீபகாலமாக தமிழ் படங்களில் வாய்ப்பு இல்லை.

இவர் முஸ்தபாராஜ் என்ற தொழிலதிபரை காதலிக்கிறார். இவரை கிரிக்கெட் போட்டியொன்றில் சந்தித்துள்ளார். இருவரும் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்வோம் என்று சமீபத்தில் அறிவித்தார்.

திருமண நிச்சயதார்த்தம் வருகிற 29ம் தேதி பெங்களூரில் நடைபெறுகிறது என்று பிரியாமணி தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் அல்லது டிசம்பரில் திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.