தான் நடித்த அஞ்சான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்குக் கூட வராத சமந்தா சமீபத்தில் தனது நண்பர் சித்தார்த் நடித்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு பளிச்சென வந்திருந்தார். வெறும் வாயை மென்று கொண்டிருந்தவர்களுக்கு அவல் கிடைத்த கதையாகிவிட்டது ஆடியோ வெளியீட்டு விழாவில் சமந்தா பங்கேற்றது. ரகசிய திருமணம் செய்து கொண்டனர். காதல் கன்பார்ம் என்றெல்லாம் கிசு கிசுவாக இல்லாமல் நேரடியாகவே செய்தி வெளியிட்டாலும் அதையெல்லாம் தூக்கி தூரப்போட்டுவிட்டு ஜோடியாக வலம் வருகின்றனர் சித்தார்த் – சமந்தா. இது இப்படியிருக்க தனக்கும், சித்தார்த்துக்கும் இடையே எதுவுமே இல்லை. அவர் எனக்கு சினிமாவில் பொறுத்தமான ஜோடி அவ்வளவுதான் என்று பட்டென்று கூறி சட்டென்று முற்றுப்புள்ளி வைக்கிறார்.

தமிழ் சினிமாவில் ஆறு மாதங்கள் தாக்கு பிடிப்பேனா என்று யோசித்த நாள் 6 ஆண்டுகள் கடந்து நடித்துக் கொண்டிருக்கிறேன். இதற்குக் காரணம் எனக்கு வாய்த்த நல்ல கதைகளும், இயக்குநர்களும்தான்.

நம்பர் 1 இடத்தை யார் வேண்டுமானாலும் பிடிக்கலாம். தமிழில் சிம்ரன், ஜோதிகா இடத்திற்கு இன்னும் யாரும் வரவில்லை.

வானம் படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்த அனுஷ்கா ஒரு ரோல் மாடல். பெரிய நடிகையாக பெயர் எடுத்தாலும் தனக்கு கேரக்டர்தான் முக்கியம் என்று நடித்து வருகிறார்.

சித்தார்த் என்னுடைய நல்ல நண்பர். சினிமாவில் எனக்கு பொறுத்தமான ஜோடி அதற்கு மேல் எதுவும் இல்லை இதுதான் நிஜம் என்கிறார் சமந்தா. நிஜமாகவே நம்புவோம்.

Loading...