தெறி படம் நேற்று வெளிவந்து வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இப்படம் உலகம் முழுவதும் ரூ 16 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகின்றது.

மேலும், இப்படத்திற்கு அனைத்து இடங்களிலும் பாசிட்டிவ் விமர்சனங்களே வருகின்றது, தற்போது ஒரு ரசிகர் எழுதிய விமர்சனம் ஒன்று அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதில் ‘என் அப்பா பல வருடங்களாக குடித்து வருகின்றார், நான் எத்தனை முறை சொல்லியும் அவர் கேட்டதே இல்லை, என்னை அடித்தும் இருக்கிறார்.

நேற்று தெறி படத்தை பார்க்க அவருடன் சென்றேன், படம் முடிந்து வெளியே வரும் போது இனி நான் குடிக்க மாட்டேன் என்று என்னிடம் கூறினார்’ என நெகிழ்ச்சியுடன் ரசிகர் ஒருவர் தன் சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

இப்படத்தில் ஒரு பையன் கெட்ட வழிக்கு போகிறான் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவன் தந்தை தான் என்பதை மிக அழுத்தமாக கூறியிருப்பார்கள்.