தெறி படம் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. இப்படம் முதல் நாள் மட்டும் தமிழகத்தில் ரூ 12.5 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ 31 கோடி வசூல் செய்ததாக ஒரு செய்தி வர, அட்லீ அதை தன் பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

இதனால், எந்திரன் படத்தின் முதல் நாள் வசூலை தெறி முறியடித்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.