குட்டிப்புலி, கொம்பன் புகழ் முத்தையா இயக்கத்தில் விஷால், ஸ்ரீ திவ்யா, ராதா ரவி நடித்திருக்கும் படம் மருது. இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படம் வரும் மே 20-ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. பிரபல ஐங்கரன் நிறுவனத்துடன் சேலத்தை சேர்ந்த 7ஜி சிவா மற்றும் அசோக் சாம்ராஜ் ஆகியோர் இந்த படத்தை கூட்டாக தமிழகம் முழுவதும் வெளியிடுகின்றனர்.