ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் ரோமானியாவில் நடைபெற்று வந்தது. இதைதொடர்ந்து இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் மலேசியா செல்ல திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் அங்கு தற்போது தட்பவெப்ப நிலை சரியில்லாததால் இதன் படப்பிடிப்பை விசாகப்பட்டினத்தில் நடத்தி வருகின்றனர். இங்குதான் இப்படத்தின் முதல் ஷெட்யூலும் நடைபெற்றது. சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடிக்கும் இப்படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Loading...