கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன் நடிக்கும் படத்திற்கு இசை யார் தெரியுமா?

கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன்
கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன்

கமல்ஹாசனும், ஸ்ருதிஹாசனும் எப்போது ஒரே படத்தில் இருவரும் நடிப்பார்கள் என பலரும் ஆவலுடன் இருந்தனர். இந்நிலையில் காமெடி கலந்து அப்பா-மகள் குறித்த ஒரு கதையை கமல் தற்போது தேர்வு செய்துள்ளார்.

இப்படத்திற்கு வசனம் கிரேஸி மோகன் எழுதுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது நீண்ட நாட்களாக கேள்விக்குறியாக இருந்தது.

பலரும் வழக்கம் போல் ஜிப்ரானாக இருப்பார் என கூறிய நிலையில் மும்பை எக்ஸ்பிரஸ் படத்திற்கு பிறகு கமலுடன் இப்படத்தில் கூட்டணி அமைக்கவுள்ளார் இசைஞானி இளையராஜா.

Loading...