நயன்தாரா நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டானதை தொடர்ந்து அவர் நடித்துள்ள தெலுங்கு படங்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. ரவிதேஜாவுடன் அவர் நடித்த படம் ‘ஆஞ்சநேயலு’.

இப்படம் தமிழில் ‘அதிரடி அர்ஜூன்’ பெயரில் திரைக்கு வருகிறது. முறைகேடாக சம்பாதித்த சிலமுக்கிய புள்ளிகளை சட்டத்தின் முன்நிறுத்த முயலும் நபர் கொல்லப்படுகிறார். அவருடன் அப்பாவியான ஹீரோவின் பெற்றோரையும் தீயிட்டு கொல்கின்றனர். அவர்களை ஹீரோவுடன் சேர்ந்து ஹீரோயினும் பழிவாங்குவது கதை.

ரவிந்திரபாபு ஒளிப்பதிவு. தமன் இசை. பரசுராம் இயக்கம். பரமேஸ்வர் ஆர்ட்ஸ் தயாரிப்பு. கே. ரவிசங்கர் வெளியீடு. பிரகாஷ்ராஜ், நாசர், கோட்டா சீனிவாசராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபகாலமாக கவர்ச்சியில் கஞ்சத்தனம் காட்டி வருகிறார் நயன்தாரா. இதனால் அவர் தெலுங்கில் கிளாமராக நடித்த படங்களுக்கு தமிழில் டப்பிங் செய்து வெளியிடவும் டிமான்ட் ஏற்பட்டிருக்கிறதாம்.

தமிழ் திரையுலகில், நம்பர்–1 அந்தஸ்தில் இருக்கும் அந்த நாயகி, சமீபகால படங்களில் இடுப்பழகை காட்டுவதை தவிர்த்து வந்தார். இடுப்பு சதை அதிகமானதே அதற்கு காரணம். அதை அகற்றுவதற்காக அவர் நவீன ஆபரேஷன் செய்து கொண்டார்.

இப்போது, இடுப்பு பகுதி ஒல்லியாகி விட்டதால், மீண்டும் அவர் இடுப்பழகை காட்டி நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்!