சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். இதற்கு சான்றாக சில வருடங்களுக்கு முன் அஜித் கூறிய கருத்திற்கு எழுந்து நின்று கைத்தட்டியவர்.

இந்நிலையில் அஜித் , பில்லா படத்தை ரீமேக் செய்ய அனுமதி கேட்டப்போது ரஜினி உடனே சம்மதித்தார். பி.வாசு இயக்கத்தில் கன்னட சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்ற படம் சிவலிங்கா.

இப்படத்தை ரஜினியை வைத்து ரீமேக் செய்ய வாசு, முயற்சிக்க, சூப்பர் ஸ்டார், ‘இதற்கு அஜித் சரியான தேர்வாக இருப்பார், அவரிடம் கேட்டுப்பாருங்கள்’ என்று கூறினாராம்.