ஜெயம் ரவி நடிக்கும் அனைத்து படங்களும் சமீப காலமாக ஹிட் தான். நம்பி பந்தயம் கட்டும் குதிரையாக வளர்ந்து வருகின்றார்.

இவர் தற்போது ரோமியோ ஜுலியட் இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் போகன் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் முதல் பாதியில் ஜெயம் ரவி ஹீரோவாகவும், அரவிந்த்சாமி வில்லனாகவும் நடிக்க, இரண்டாம் பாதியில் ரவி வில்லனாகவும், அரவிந்த்சாமி ஹீரோவாகவும் வருவார்களாம்.

அது எப்படி? என்றால், போகன் திரைக்கதை ஸ்பெஷல் இது தானாம், ஆனால், இப்படம் ஏதோ ஜப்பான் படத்தில் தழுவல் என்றும் ஒரு செய்தி கிசுகிசுக்கப்படுகின்றது.