அட்லியை திருமணம் செய்து கொண்ட பின்னர் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் நடிகை பிரியா. விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் மூலம் அறிமுகமானவர் ப்ரியா. அதன் பிறகு பல சீரியல்களில் நடித்தார். சிங்கம், நான் மகான் அல்ல உள்ளிட்ட சில திரைப்படங்களில் ஹீரோக்களின் தங்கையாக நடித்தார். ப்ரியாவுக்கும், ராஜா ராணி படத்தின் இயக்குனர் அட்லீக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. வருகிற நவம்பர் மாதம் திருமணம் நடக்க இருக்கிறது. இந்த திருமணம் பெற்றோர்கள் பார்த்து நிச்சயித்த திருமணம்தான் என்கிறார் பிரியா.

இது பற்றி பிரியா சொல்வதை மேற்கொண்டு படியுங்களேன்.

அட்லி குடும்பமும், எங்கள் குடும்பமும் பேமிலி பிரண்ட். அட்லியை எனக்கு பல வருடங்களாகத் தெரியும். நல்ல பிரண்டாத்தான் இருந்தார்.

எங்களுக்குள் லவ் எதுவும் இல்லை. ஒரு நாள் எனக்கு வீட்டுல மாப்பிள்ளை பார்க்குறாங்கன்னு சொன்னேன். என் ஜாதகத்தை தரட்டுமான்னு டக்குன்னு கேட்டுட்டார்.

அதுக்கு பிறகு இரண்டு குடும்பத்தாரும் பேசி கல்யாணத்தை முடிவு பண்ணினாங்க. இது அரேன்ஞ்சுடு மேரேஜ்தான். இப்பதான் லவ் பண்ண ஆரம்பிச்சிருக்கோம்.

நடிப்பு எனக்கு பேஷனோ, தொழிலோ இல்லை. வாய்ப்புகள் கிடைச்சுது சும்மா ஒரு ஹாபிக்காக நடித்தேன். நிச்சயமாக கல்யாணத்துக்கு பிறகு நடிக்க மாட்டேன். இது நானே எடுத்த முடிவு” என்கிறார் ப்ரியா.