மணிரத்னத்தின் புதிய படத்தில் சாய் பல்லவி நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் அவர் திடீரென்று படத்திலிருந்து நீக்கப்பட்டார்.

நாயகி கதாபாத்திரத்தில் நடிப்பவர் சாய் பல்லவியைவிட வயதானவராகவும், மெச்சூரிட்டியுடனும் இருக்க வேண்டும் என்பதால் சாய் பல்லவி மணிரத்னத்தின் படத்திலிருந்து விலகியதாக சாய் பல்லவியின் அம்மா விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், சாய் பல்லவியைவிட இளமையாக இந்தி நடிகை அதிதி ராவை மணிரத்னம் ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அதிதி ராவ் ராக் ஸ்டார், வசீர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.