நரரோஹித்தின் சாவித்திரி படத்தின் பாடல்கள் வெளியீட்டின் போது பெண்களை பற்றி தவறான கருத்துக்களை கூறியதாக சர்ச்சையில் சிக்கிய பாலகிருஷ்ணா தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். நாயகி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்ற பாலகிருஷ்ணா த்ரிஷாவை முத்தமிட்டு மீண்டும் சர்ச்சையில் மாட்டியுள்ளார்.

நாயகியை மையப்படுத்திய திகில் கதையில் முதன்முறையாக த்ரிஷா நடிக்கின்றார். தமிழ் மற்றும் தெலுங்கில் நாயகி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பாடல்கள்வெளியீட்டு விழா நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பாலகிருஷ்ணா கலந்து கொண்டார்.

விழாவில் போது த்ரிஷாவிற்கு கண்ணத்தில் முத்தம் கொடுத்தார். வயது மூத்த நடிகர் பொது இடத்தில் அநாகரிகமாக செயல்பட்டதாக பாலகிருஷ்ணாவிற்கு எதிராக கன்னடங்கள் எழுந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.