அஜித் தனக்கு ஒரு தயாரிப்பாளர் செட் ஆகிவிட்டால் தொடர்ந்து அவர் தயாரிப்பிலேயே நடிப்பார். சமீபத்தில் ஏ.எம்.ரத்னத்துடன் என்னை அறிந்தால், வேதாளம் என தொடர்ந்து பணியாற்றி வந்தார்.

தற்போது ரத்னம் அடுத்து விக்னேஷ் சிவன்-விஜய் சேதுபதி, ஜெயம் ரவி நடிக்கும் படம், விஷால் படம் என தயாரிக்கவிருக்கின்றார்.

இதுமட்டுமின்றி தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் படத்தையும் தயாரிக்கவிருக்கின்றாராம். ரத்னம் சில வருடங்களுக்கு முன் பண கஷ்டத்தால் படமே தயாரிக்காமல் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.