தமிழ் ரசிகர்கள் தரும் அன்பே போதும்.. எனக்காக யாரும் கோயிலெல்லாம் கட்ட வேண்டாம் என்று கூறியுள்ளார் நடிகை நயன்தாரா. நடிகைகளுக்கு கோயில் கட்டி, உலகையே வியக்க வைத்தவர்கள் தமிழ் சினிமா ரசிகர்கள்.

அப்படி ஒரு பாக்கியத்தை முதலில் பெற்றவர் குஷ்பு. அந்தக் கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் பூசாரியை வைத்து பூஜை அர்ச்சனை வழிபாடுகளும் நடத்தப்பட்டன.

அடுத்து நக்மாவுக்கும் கோவில் கட்டினர். பாட்ஷா வெளியாகி, நக்மா பெரிய ரேஞ்சில் இருந்த நேரம் அது.அது நமீதாவுக்கும் கோயில் கட்டுவதாக செய்தி வெளியானது.

இப்போது நயன்தாராவுக்கு கோவில் கட்ட தற்போது ஏற்பாடுகள் நடக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள நயன்தாரா ரசிகர்கள் இணைந்து இக்கோவிலை கட்டப் போகிறார்களாம். தோதான இடத்தை தேர்வு செய்யும் முயற்சியில் உள்ளனர்.

கோவில் கட்டுவதற்கு நயன்தாரா விடமும், அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் நயன்தாரா இதற்கு சம்மதிக்கவில்லை. கோவில் கட்ட வேண்டாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் கூறுகையில், “ரசிகர்களின் அன்பும் ஆதரவும் எனக்குப் போதுமானது. இதற்கு மேல் எதையும் நான் எதிர்பார்க்கவில்லை.

எனக்கு கோவில் கட்டும் செயலில் ஈடுபடாதீர்கள் என் வேண்டுகோளையும் மீறி கோவில் கட்டினால், அது மன அமைதியைக் கெடுப்பதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

Loading...