சூர்யா நல்ல விஷயங்களுக்காக மற்றவர்களை பாராட்டுவதில் இருந்து எப்போதுமே தவறியது இல்லை. தற்போது சூர்யா, சமந்தா கூட்டணி 24 படத்தில் மீண்டும் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் அஞ்சான் படத்தை விட இதில் தங்களுக்குள் அதிக ரொமான்ஸ் காட்சிகள் இருப்பதாகவும், அதில் சமந்தா சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாகவும் சூர்யா கூறியுள்ளார்.

அதோடு சமந்தா படங்களை தேர்வு செய்வதில் அதிக அக்கறை கொண்டுள்ளார். விக்ரம் குமாருடன் அவர் ஏற்கெனவே பணியாற்றி இருப்பதால் இந்த படம் அவருக்கு இன்னும் சுலபமாக இருந்தது என கூறியுள்ளார்.