“கத்தி”யைப் பார்க்கத் துடிக்கும் “சுள்ளான்”!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கத்திப் படத்தைப் பார்ப்பதற்கு நடிகர் தனுஷ் மிகவும் ஆர்வமாக உள்ளாராம். கத்தி படத்திற்கு முன்பே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் துப்பாக்கிப் படத்தில் நடித்துள்ளார். காஜல் அகர்வால் ஜோடியாக நடித்த இப்படம் பெரும் வெற்றி பெற்றது. எனவே, தற்போது கத்திப் படத்தையும் ரசிகர்கள் வெகு ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடி சமந்தா. அனிருத் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன. நடிகர் சதீஷ் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து காமெடி செய்துள்ளார்.

விஜயின் கத்தி படத்தை மற்ற ரசிகர்களைப் போலவே, நடிகர் தனுஷும் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்னும் 5 நாட்கள் இருக்கே.. கத்திப் படத்தின் முதல் நாள், முதல் ஷோ பார்ப்பதற்காக காத்திருக்க முடியவில்லையே’ என அதில் அவர் கூறியுள்ளார்.

கத்தி படத்தை லைகா தயாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. பின்னர் ஒருவழியாக இப்படம் தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...