ஆபாச வீடியோவில் உள்ள பெண் நான் அல்ல என்று நடிகை ராய் லட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக வாட்ஸ்ஆப் உள்ளிட்ட இணையதளங்களில் நடிகை ராய் லட்சுமியின் ஆபாச வீடியோ என்று கூறப்படும் ஒளிப்படம் வெளியாகி வருகிறது.

அந்தப் படத்தில் உள்ள பெண் பார்க்க ராய் லட்சுமியின் தோற்றத்தைப் போலவே காட்சியளித்ததால் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ராய் லட்சுமியிடம் கேட்டபோது அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

“இப்படி ஒரு வீடியோ உலா வருவதாக எனது நண்பர்கள் என் கவனத்துக்குக் கொண்டு வந்தார்கள். ஆனால் அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல. ஒரு நடிகையாக இதுபோன்ற விஷயங்களை நான் எதிர்நோக்க வேண்டியுள்ளது”, என்றார். இரு தினங்களுக்கு முன்பு சரிதா நாயரின் வீடியோ வாட்ஸ்ஆப்பில் உலா வந்தது. அதற்கு முன் ஷாரூக்கான் மகனின் ஆபாச வீடியோ வெளியானது நினைவிருக்கலாம்.