விஜய் 58 படத்தில் முதலில் பிரமாண்ட செட்டில் பாடலை படமாக்குகிறார்களாம். விஜய் சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் 10ம் தேதி துவங்குகிறது. இந்த படத்திற்காக ஈ.சி.ஆர். பகுதியில் பிரமாண்ட செட் போட்டு வருகிறார்கள்.

அந்த செட்டில் 300 டான்ஸர்களுடன் விஜய் ஆடும் பாடலை முதலில் படமாக்குகிறார்களாம்.

அதன் பிறகு சண்டை காட்சியை படமாக்க உள்ளார்களாம். மொத்தம் 5 சண்டை காட்சிகள் உள்ளதாம். படத்தில் ஸ்ரீதேவியின் கதாபாத்திரம் மட்டுமே பேன்டஸியாம். மற்றபடி படம் பக்கா கமர்ஷியலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு ஹன்சிகா, ஸ்ருதி ஹாஸன் என இரண்டு ஜோடிகள். படத்தில் வரும் சுதீப்பின் கதாபாத்திரம் கில்லி பிரகாஷ் ராஜ் கதாபாத்திரத்தை விட பிரபலமாகுமாம்.

பல ஆண்டுகள் கழித்து ஸ்ரீதேவி நடிக்கும் தமிழ் படம் இது என்பது குறிபப்பிடத்தக்கது.

Loading...