‘அஞ்சான்’ படத்திற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்ட சூர்யா சற்றும் தளராமல், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாஸ்’ படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்கவிருந்த நிலையில், இப்போது அவர் படத்திலிருந்து விலகி விட்டதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சியான வெங்கட் பிரபு தற்போது, புதிய கதாநாயகியை தேடி வருகிறார்.

பிரியா ஆனந்த், அமலா பால், டாப்சி ஆகியோரை அணுகிய வெங்கட் பிரபுவுக்கு அதிர்ச்சி தான் மிஞ்சியது. காரணம் அவர்கள் யாரும் சூர்யாவுடன் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க விரும்பவில்லை.

“சூர்யாவுக்கு இது சோதனை காலம் போல”