அட்லி மற்றும் ப்ரியா இருவரும் காதலித்து நவம்பர் 9ம் தேதி திருமண பந்தத்தில் இணைய உள்ளனர். ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அதிரடியாக இயக்குனர் அவதாரம் எடுத்தார் ஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அட்லி.

ஒரே படத்தின் மூலம் மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்த இந்த 27 வயது இளைஞருக்கு, ‘சிங்கம்’ படத்தில் அனுஷ்காவின் தங்கையாக நடித்த கிருஷ்ண ப்ரியாவுடன் காதல் மலர்ந்தது.

atlee_priya

 

தங்களது எண்ணங்களை முறைப்படி பெற்றோரிடம் தெரிவித்து, சம்மதமும் வாங்கிய இந்த ஜோடிக்கு செப்டம்பர் 7ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

இந்நிலையில் இவர்களின் திருமண வரவேற்பு வருகிற 9ம் தேதி சென்னை ஹயாத் ஹோட்டலில் மாலை நடைபெறவிருக்கிறது.

atlee-to-marry-actress-priya