கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் பெயர் சமீபத்தில் தான் வெளிவந்தது. அப்படத்திற்கு என்னை அறிந்தால் என்ற பெயர் வைத்தனர். ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உலக அளவில் இந்த டைட்டில் ட்ரெண்டாகி சாதனையெல்லாம் படைத்தது.

இப்போது இந்த டைட்டிலை இது ஒரு டைட்டிலா என்று சொல்லும் வகையில் ஒரு தகவல் வந்துள்ளது.

அதாவது 2002 ஆம் ஆண்டு ‘கவர்ச்சி நடிகை ஷகீலா’ மற்றும் ‘கவர்ச்சி புயல் ரேஷ்மா’ நடிப்பில் வெளிவந்த படத்தின் பெயரும் ‘என்னை அறிந்தால்’. இந்த தகவலை ஷகிலாவின் என்னை அறிந்தால் படத்தின் போஸ்டரோடு ஒருவர் டிவிட்டரில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

என் தலைவியின் பட டைட்டிலை எப்படி அஜித் படத்திற்கு வைக்கலாம் என ஆவேச கருத்துகளையும் வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த விஜய் ரசிகர்கள் இதுதான் சரியான நேரம் என்று அஜீத் ரசிகர்களை மோசமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

yennai_arindhaal_fl001