ராஜா ராணி என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் சினிமா இயக்குனர்களில் முக்கிய இடத்திற்கு வந்தவர் அட்லீ. இவர் தொலைக்காட்சி புகழ் ப்ரியாவை காதலித்து வந்தார். இந்த காதல் ஜோடிக்கு செப்டம்பர் 7ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

இந்நிலையில் வருகிற 9ஆம் தேதி அட்லி – ப்ரியாவின் திருமணம் நடைபெறவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து அன்று மாலை சென்னை ஹயாத் ஹோட்டலில் திருமண வரவேற்பும் நடைபெறவிருக்கிறது.

தற்போது அட்லீ, சிம்புதேவன் இயக்கும் படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். ஆனால், திருமணம் முடிந்த கையோடு வெளிநாட்டுக்கு தேனிலவுக்கு செல்கிறாராம்.

தேனிலவு முடிந்து திரும்பியதும் விஜய் பட வேலையில் களமிறங்க அட்லீ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

atlee-to-marry-actress-priya_1