அஜீத் என்ன தான் படங்களில் பிசியாக இருந்தாலும் தனது மகளின் பள்ளி விழாவில் கலந்து கொள்ள தவறவில்லை.

அஜீத் குமார் கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. படத்தை டிசம்பர் மாதத்தில் ரிலீஸ் செய்ய கௌதம் திட்டமிட்டுள்ளார்.

அஜீத் படப்பிடிப்பில் இருந்தாலும் தனது மகள் அனௌஷ்காவுக்கு முக்கியத்துவம் அளிக்க தவறியது இல்லை. இந்நிலையில் அண்மையில் அனௌஷ்காவின் பள்ளியில் நடந்த விழாவில் அஜீத் கலந்து கொண்டுள்ளார்.

கழுத்தில் கேமராவுடன் ஓரமாக அவர் நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. விழாவில் அஜீத் தனது மகளுடன் சேர்த்து பிற குழந்தைகளையும் போட்டோ எடுத்துள்ளார். அவருக்கு பைக் ஓட்டுவது தவிர புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கௌதம் படத்தை முடித்த பிறகு அஜீத் சிறுத்தை சிவா படத்தில் நடிக்க உள்ளார்.

Ajith