அஜீத்திடம் தன் மகள் ஷாலினியை ஒப்படைத்த பிறகு பெரிய பொறுப்பு இறங்கிய நிலையில் சினிமாவை விட்டு விலகி இருந்தார் ஷாலினியின் அப்பா. அதோடு தன் இரண்டாவது மகள் ஷாம்லியையும் நடிப்பிலிருந்து விலக்கி வெளிநாட்டுக்கு படிக்க அனுப்பியிருந்தார்.தற்போது அவரின் படிப்பு முடிந்துள்ள நிலையில், மீண்டும் சினிமாவில் வர ஆசையை தெரிவித்துள்ளார்.

இந்த விஷயத்தை ஷாம்லி அஜீத்திடம் சொல்ல, அவரும் க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார்.முதற்கட்டமாக வெங்கட் ராமின் போட்டோ ஷுட்டில் கலந்திருக்கிறார்.

விரைவில் ஷாம்லியின் புகைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.