தன்னுடைய திருமணம் மற்றும் சொந்த வாழ்க்கைக் குறித்து வரும் செய்திகளைப் படித்து தனக்கே போரடித்துவிட்டதாகவும், வேறு சுவாரஸ்யமான செய்திகளைத் தாருங்கள் என்றும் கமென்ட் அடித்துள்ளார் நடிகை த்ரிஷா.

த்ரிஷாவுக்கும் தொழிலதிபர் கம் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக படங்களுடன் தகவல் வெளியானது. இது செய்தியாக பிரபல பத்திரிகைகள், ஒன்இந்தியா உள்ளிட்ட இணையதளங்களில் வெளியாகின.

ஆனால் த்ரிஷாவும் அவர் தாயாரும் இந்த செய்தியை மறுத்துவிட்டார்கள். நாங்களே சொல்கிறோம். நீங்களாக எதையும் எழுத வேண்டாம் என்றார்கள்.

இதைத் தொடர்ந்து த்ரிஷாவும் அவர் அம்மாவும் உண்மையை மறைப்பதாக திரையுலகைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களே ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் கமெண்ட் அடிக்க ஆரம்பித்தனர். எப்படியும் ஜனவரியில் இதே விஷயத்தைச் சொல்லத்தான் போகிறார்கள் என்றும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது திருமணம், சொந்த வாழ்க்கைக் குறித்த செய்திகளைப் படித்தால்.. ஆவ்.. போரடிக்கிறது. ஏதாவது புது டாபிக்கைப் பற்றிப் பேசுங்களேன்,” என்று கமெண்ட் அடித்துள்ளார்.