தன் பெற்றோர்கள் அழகானவர்கள் என்பதால் தானும் அழகாக உள்ளதாக தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.

நட்சத்திர தம்பதியான கமல் – சரிகாவின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழில், சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப் படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து வருகிறது.

இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ருதி பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-

shruti-hassn

மேக்கப் போடாமலேயே நான் அழகாகத்தான் இருக்கிறேன். சினிமா நடிகைகள் எல்லோரும் படத்தில் அழகாக தெரிகிறார்கள்.

அதற்கு காரணம் மேக்கப் போடுவதும், போகஸ் லைட்டும்தான் காரணம். இதுவே திரையில் நடிகைகளை அழகு படுத்தி காட்டுகிறது.

என்னைப் பொருத்தவரை மேக்கப் போடாமலேயே அழகாக இருக்கிறேன். என் உடல் அமைப்பு இயற்கையாகவே அழகானது.

என் பெற்றோர் அழகானவர்கள் என்பதால் நானும் அழகாக இருக்கிறேன்’ என அதில் அவர் தெரிவித்துள்ளார்.