அமைதியாக இருக்கும் இடமே தெரியாமல் இருக்கும் நடிகைகள் முத்தக்காட்சி, காதல் கிசுகிசுக்களில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்துவார்கள்.

அப்படி எதுவும் சிக்கவில்லையா எதையாவது பேசி ஊடகங்களில் ஊதவைத்து இருக்கும் இடத்தை தக்க வைப்பார்கள். தமிழில் கூட மார்க்கெட் டல்லான குஷ்புவிற்கும் கற்பு மேட்டர்தான் கைகொடுத்தது.
அதுவே அரசியல் கட்சியில் ஐக்கியம் ஆகவைத்தது. தெலுங்கில் மார்க்கெட் இல்லை, தமிழ் திரையுலகம் திரும்பி பார்க்கவே இல்லையென்றாலும் பாலிவுட் போன இலியானா கொஞ்சமும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வளைய வருகிறார்.

கொஞ்சமே கொஞ்சம் துணி உடுத்தி சினிமா விழாக்களில் பங்கேற்பது தொடங்கி செக்ஸ் பற்றி பேசுவது வரை பாலிவுட் உலகை பதறவைத்துக்கொண்டிருக்கிறாராம் இந்த தென்னகத்து நாயகி.

பாலிவுட்டில் ‘பர்ஃபி ‘ என்ற படத்தில் அறிமுகமாகி பிரபலமானார். தற்போது தற்போது ‘ஹேப்பி என்டிங்’ படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஊடகம் ஒன்றிர்க்கு பேட்டியளித்த இலியானா “செக்ஸ் என்பது ஒருவேளை நம் உடம்பை நல்ல ஷேப்பில் வைத்துக் கொள்ள உதவுகிறது. அது ஒரு மகிழ்ச்சியை அளிக்கிறது, அது அவசியமான ஒன்றுதான்,” என்று சொல்லியிருக்கிறார்.

செக்ஸ் வைத்து கொண்டால், நம் உடம்பு நல்ல ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இதுவே பல சர்ச்சைகளை கொண்டுவர, இதேபோல் ஒரு தனியார் தொலைக்காட்சியில் 16 வயது இருக்கும் போதே தன் தந்தையுடன் செக்ஸ் பற்றி பேசியுள்ளேன் என்று அவர் கூற பிரச்சனை பூதாகரமாக மாறிவிட்டது.

உடையில் மட்டுமல்ல பேச்சிலும் தான் ஓபன்தான் என்பதை நிரூபித்து வருகிறார் இலியானா. ஆனால் இது விசுவரூபமெடுக்கவே தற்போது மவுனசாமியாகிவிட்டாராம் இலியானா.

இவ்வளவு ஓப்பனாக இருக்கிறாரே என்று, உடனே அவருடைய ஆஸ்திரேலியா பாய் பிரண்ட் பற்றி அனைவரும் கேட்க அது என்னுடைய பர்சனல், அதைப்பற்றி யாரும் கேட்டு தொந்தரவு செய்யவேண்டாம் என்று கடுப்படிக்கிறாராம் இலியானா.

indian-actress-ileana-latest-image-gallery-6