‘காதல்’, ‘டிஷ்யூம்’, ‘வல்லவன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ‘காதல்’ சந்தியா. முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்த இவருக்கு, வாய்ப்புகள் குறைந்த நிலையில், ‘யா யா’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக காமெடி வேடத்தில் நடிக்கத் தொடங்கினார். இதையடுத்து, இவருக்கு மலையாளத்தில் காமெடி நடிகையாக நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது தமிழில் ‘சூதாட்டம்’, ‘கத்துக்குட்டி’, ‘துணை முதல்வர்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

இதில், பாக்யராஜ் கதை எழுதி நடித்து வரும் ‘துணை முதல்வர்’ படத்தில் இன்னொரு நாயகனாக நடிக்கும் மலையாள நடிகர் ஜெயராமுக்கு ஜோடியாக சந்தியா நடித்து வருகிறார். தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் உருவாகும் இப்படத்தில் பாக்யராஜூக்கு ஜோடியாக ஸ்வேதா மேனன் நடித்து வருகிறார்.
இப்படத்தில் இடம்பெறும் பாடல் காட்சி ஒன்றில் ஸ்வேதா மேனன் படுகவர்ச்சியாக நடனமாடியிருக்கிறாராம். அதே பாடலில் ஜெயராமுடன், சந்தியாவும் இணைந்து நடனமாடியிருக்கிறாராம். இதுவரை நடித்த படங்களில் கவர்ச்சிக்கு இடம் கொடுக்காத சந்தியா, இந்த பாடலில் ஸ்வேதா மேனனின் கவர்ச்சிக்கு ஈடுகொடுக்கும்படியாக கவர்ச்சி உடை அணிந்து நடனமாடியிருக்கிறாராம்.
இவர்கள் இருவரின் கவர்ச்சி போட்டி ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.