தமிழ் சினிமாவில் எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் ஏ.ஆர். ரகுமான் அவர்களின் இசைக்கு ஒரு தனி கூட்டமே இருக்கிறது. இந்த ஆண்டு அவருடைய இசையமைப்பில் கோச்சடையான், காவியத்தலைவன், ஐ, லிங்கா” ஆகிய படங்கள் உருவாகியுள்ளன.

காவியத்தலைவன், லிங்கா, ஐ படங்களுக்காக கடந்த நான்கைந்து மாதங்களாக இடைவிடாமல் இரவு, பகல் என்றும் பாராமல் அவரும் அவருடைய குழுவினரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே இப்படங்களின் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளன. தொடர்ந்து ஓய்வு இல்லாமல் உழைத்ததால், ரகுமான் ஒரு மாதத்திற்கு ஓய்வு எடுக்கப் போவதாக கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், நானும் என் குழுவினரும் கடந்த நான்கு மாத காலமாக ஓய்வு இல்லாமல் உழைத்து இருக்கிறோம். அவர்களுக்கு தூக்கம் என்பதே சரியாக இல்லை. அதனால் ஒரு மாதத்திற்கு அவர்களுக்கு ஓய்வு அளித்துள்ளேன்.

ஒருமாத ஓய்வுக்குப்பின் மணிரத்னம் இயக்கிவரும் படத்தின் பின்னணி இசை வேலையை ஆரம்பிக்க உள்ளதாக கூறியிருக்கிறார்.

Loading...