அஜித் நடிப்பில் என்னை அறிந்தால் படம் இந்த பொங்கலுக்கு வரும் என படக்குழு அறிவித்தது. ஆனால், நேற்று தான் இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது.ஹைதராபாத் இரயில்வே நிலையத்தில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி எடுக்கப்பட்டுள்ளது.

படத்தின் முதல் பாதி அனைத்தும் முடிந்து விட்டதாம்.இரண்டாம் பாதியில் கொஞ்சம் எடிட்டிங் மற்றும் டப்பிங் வேலைகள் மட்டும் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படம் பொங்கலுக்கு வருமா? என்று படக்குழுவிடம் விசாரிக்கையில், கண்டிப்பாக வரும் அதில் எந்த மாற்றமும் இல்லை என கூறுகின்றனர்.