தமிழ் சினிமாவில் சிலரது கூட்டணி அமைந்தால் எதிர்ப்பார்ப்பு தானாக கூடிவிடும். அந்த வகையில் செல்வராகவனும், சிம்புவும் ஒரு படத்தில் இணைவதாக இருந்து அப்படம் கைவிடப்பட்டது.

தற்போது மீண்டும் இப்படம் தொடங்கவுள்ளது. இதை தன் டுவிட்டர் பக்கத்தில் செல்வராகவனும், சிம்புவும் கூறினர். இதை தொடர்ந்து தனுஷும் தன் வாழ்த்தை கூறினார்.

இதில் ‘தம்பி சிம்பு என் அண்ணனிடம் நிறைய கற்றுக்கொள்’ என டுவிட் செய்திருந்தார். மேலும், நீண்ட இடைவேளைக்கு பிறகு செல்வராகவன், யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றவுள்ளார்.