பிரபல தொழிலதிபரை காதலிக்கும் சமந்தா- கசிந்த ரகசியம்

சமந்தா
Samantha

பாணா காத்தாடி, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் சமந்தா. இவர் பிரபல நடிகர் சித்தார்த்தை காதலித்து வந்தார்.

பின் அவர்களுக்குள் ஏற்பட்ட சில பிரச்சனையால் காதல் முறிந்தது. இதை தொடர்ந்து சித்தார்த், சமந்தா இருவரும் சினிமாவில் கவனத்தை செலுத்த ஆரம்பித்து விட்டனர்.

இந்நிலையில் சமந்தா தொழில் அதிபர் ஒருவருடன் காதல் வயப்பட்டுள்ளதாக புது தகவல் வெளியாகி உள்ளது. அந்த தொழில் அதிபர் சென்னையை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. இருவரும் ரகசியமாக சந்தித்து பேசுகிறார்கள். விரைவில் இந்த காதல் விவகாரம் அம்பலத்துக்கு வரும் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Loading...