பிரபல ஹாலிவுட் நடிகை ஹல்லே பெர்ரி தற்போது இந்தியா வந்துள்ளார். கடந்த 8ம் தேதி நண்பர்களுடன் மும்பை வந்திறங்கிய அவர் இரண்டு நாட்கள் அங்கிருந்துள்ளார். பின்னர் 10ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு ஆயுர்வேத ரிசார்ட்டுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.

அதன் பிறகு சுற்றுயிருந்த பகுதிகளை சுற்றி பார்த்த அவர் படகு சவாரி மேற்கொண்டுள்ளார். சில கோவில்களுக்கும் சென்று வழிபட்டுள்ளார்.

மும்பை, கேரளாவில் தான் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அவரது வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததால் மக்கள் யாரும் அவரை பெரிதாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

Feeling it 🔥

Et innlegg delt av Halle Berry (@halleberry)