நிர்வாண காட்சியில் எப்படி நடித்தேன்? நேரடியாக தியேட்டருக்கு சென்று கருத்து கேட்ட அமலாபால்!

மேயாத மான் இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் அமலா பால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ஆடை. முழுக்க முழுக்க பெண் சுதந்திரத்தை பற்றிய இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

நிர்வாண காட்சியில் எப்படி நடித்தேன்? நேரடியாக தியேட்டருக்கு சென்று கருத்து கேட்ட அமலாபால்!
அமலாபால்

மேயாத மான் இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் அமலா பால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ஆடை. முழுக்க முழுக்க பெண் சுதந்திரத்தை பற்றிய இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

இன்னமும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் முதலில் தயாரிப்பாளரது நிதி பிரச்சனை காரணமாக வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது.

இதையடுத்து, தனது சம்பளத்தில் ஒரு பகுதியை விட்டுக்கொடுக்க தயாரிப்பாளரது சம்பள பிரச்சனை தீரவே கடந்த 19ம் தேதி அன்று மாலை 6 மணிக்கு படம் வெளியானது.

தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றாலும், வசூல் ரீதியாக விக்ரமின் கடாரம் கொண்டான், தி லயன் கிங் ஆகிய படங்களின் வசூலிடம் தோல்வியுற்றது. இந்த நிலையில், இப்படத்தில் நிர்வாண காட்சியில் நடித்துள்ள தனக்கு ரசிகர்களிடம் எப்படி வரவேற்பு கிடைத்துள்ளது என்பதை நேரடியாகவே சென்று அவர்களிடம் விமர்சனம் கேட்டுள்ளார்.