நடிகை பூஜா ஹெட்ஜேவிற்கு இத்தனை கோடி சம்பளமா?

தமிழில் மிஷ்கினின் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர், நடிகை பூஜா ஹெட்ஜே. பிறகு தமிழில் அவ்வளவாக பட வாய்ப்புகள் வராததால் தெலுங்கு பக்கம் சென்றார்.

நடிகை பூஜா ஹெட்ஜேவிற்கு இத்தனை கோடி சம்பளமா?
பூஜா ஹெட்ஜே

தமிழில் மிஷ்கினின் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர், நடிகை பூஜா ஹெட்ஜே. பிறகு தமிழில் அவ்வளவாக பட வாய்ப்புகள் வராததால் தெலுங்கு பக்கம் சென்றார்.

ஆனால் அங்கு தொடக்கத்திலேயே அவருக்கு ஒக்க லைலா கோசம், முகுந்தா, சமீபத்தில் மகேஷ் பாபுவுடன் மகரிஷி என தொடர்ந்து ஹிட் படங்கள் அமைந்ததால் பாலிவுட்டிலும் ஹிரித்திக் ரோஷனுடன் ஒரு படத்திலும் நடித்து முடித்தார்.

மேலும் தெலுங்கில் ரீமேக்காகவுள்ள தமிழில் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டரான ஜிகர்தண்டா படத்தில் இவர் தான் ஹீரோயின்.

இந்நிலையில் இந்த ரீமேக் படத்திற்காக இவர் ரூபாய் 1.5 கோடியை சம்பளமாக வாங்கியுள்ள தகவல் தற்போது கிடைத்துள்ளது. அவரது சினிமா பயணத்தில் அதிகப்பட்ச சம்பளமான இந்த தொகையையும் தயாரிப்பாளர்கள் கொடுக்க போட்டி போடுவது தான் இதில் இருக்கும் அதிசயம்.