மனதளவில் பாதிப்படைகிறேன்! நடிகை சமந்தா

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தாவின் நடிப்பில் விரைவில் ஓ பேபி என்ற படம் திரைக்கு வரவுள்ளது.

மனதளவில் பாதிப்படைகிறேன்!  நடிகை சமந்தா
சமந்தா

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தாவின் நடிப்பில் விரைவில் ஓ பேபி என்ற படம் திரைக்கு வரவுள்ளது.

இதனால் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார் சமந்தா. இது தொடர்பாக சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

அதில், சமூக வலைத்தளங்களில் என்னை ட்ரோல் செய்யும் கமெண்ட்கள் என்னை மனதளவில் பாதிப்படைய செய்கின்றன. அவை என்னை தவறான முடிவுகளுக்கும் அழைத்து செல்கின்றன.

அதுபோன்ற நேரங்களில் அவற்றில் இருந்து விடுபட என்னை செய்வது என கூறவும் ஆட்கள் இருப்பதில்லை. ஆனால் இப்போது அதுபோன்ற சமயங்களில் அத்தகைய கமெண்ட்களை கண்டுகொள்வதில்லை, நகைச்சுவையுடன் கடந்துவிடுகிறேன் என்றார்.