படப்பிடிப்புக்கு என்னால் வர முடியாது, நடிகை காஜல் அகர்வால்!

தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தற்போது கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்புக்கு என்னால் வர முடியாது, நடிகை காஜல் அகர்வால்!
காஜல் அகர்வால்

தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தற்போது கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் மிக பெரிய கோரா சம்பவம் நடந்தது. ஆம் இப்படத்தில் பணிபுரியும் மது, ஸ்ரீ கிருஷ்ணா, மற்றும் சந்திரன் என்ற மூன்று நபர்கள் கிரேன் தவறி கீழே விழுந்து மரணமடைந்தார்கள்.

இந்த சம்பவத்தை குறித்து நடிகர் கமல் ஹாசன் அந்த மரணமடைந்த நபர்களுக்கு ரூபாய் 2 கோடி உதவி தொகையாக வழங்கினார். மேலும் அந்த கிரேன் ஆபரேட்டர் ராஜன் மீது வழக்கு போடப்படும் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பிறகு காஜல் அகர்வால் தனது கண் முன்னாள் மூன்று உயிர் போனதினால் வீட்டை விட்டு வேறு எங்கும் செல்வதில்லையாம். மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த ஈஷா மஹாசிவராத்திரி விழாக்கு மட்டும் தான் காஜல் கலந்து கொண்டுள்ளார். இதன்பின் இரண்டு வாரத்திற்கு படப்பிடிப்புக்கு என்னால் வர முடியாது என்று காஜல் கூறியுள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.