கதைக்கு தேவை என்றால் நான் சிகரெட் பிடிப்பேன்! ரகுல் ப்ரீத்சிங்!

சமீப காலமாக நடிகைகள் சிகரெட் பிடிப்பது, குடிப்பது போன்ற காட்சிகளில் சர்வ சாதாரணமாக நடித்து வருகின்றனர். ஆடை படத்தில் அமலா பால் தம்மு தண்ணி என சுற்றுவது படத்தின் ட்ரெயிலரில் தெரிந்தது.

கதைக்கு தேவை என்றால் நான் சிகரெட் பிடிப்பேன்! ரகுல் ப்ரீத்சிங்!
ரகுல் ப்ரீத்சிங்

சமீப காலமாக நடிகைகள் சிகரெட் பிடிப்பது, குடிப்பது போன்ற காட்சிகளில் சர்வ சாதாரணமாக நடித்து வருகின்றனர். ஆடை படத்தில் அமலா பால் தம்மு தண்ணி என சுற்றுவது படத்தின் ட்ரெயிலரில் தெரிந்தது.

அதற்கு அடுத்ததாக சமீபத்தில் வெளியான மன்மதுடு-2 டீசரில் படத்தின் ஹீரோயின் ரகுல் ப்ரீத்சிங் புகைப்பிடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி அவரை சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். இந்நிலையில் இதுகுறித்து பேசிய ரகுல் பிரீத் சிங் இதுபோல் பேசுபவர்கள் எப்போதும் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு பேசுவது மட்டும்தான் வேலை.

மன்மதடு 2 படத்தில் நான் மாடர்ன் பெண்ணாக நடிக்கிறேன். அந்த கதாபாத்திரம் சிகரெட் புகைக்கும் என்பதால் நான் நடித்தேன். கதைப்படி என்ன தேவைப்படுகிறதோ அதை செய்வேன், என்று தடாலடியாக கூறினார் ரகுல்.

Rakul Preet Singh