அவமதித்த ஊடகம் - மனவேதனையுடன் நடிகை அதிதி ராவ்!

மணிரத்னம் இயக்கத்தில் காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் ஹிந்தி நடிகை அதிதி ராவ். பின் அவருடனேயே செக்க சிவந்த வானம் படத்திலும் நடித்திருந்தார்.

அவமதித்த ஊடகம் - மனவேதனையுடன் நடிகை அதிதி ராவ்!
அதிதி ராவ்

மணிரத்னம் இயக்கத்தில் காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் ஹிந்தி நடிகை அதிதி ராவ். பின் அவருடனேயே செக்க சிவந்த வானம் படத்திலும் நடித்திருந்தார்.

அண்மையில் அவரின் நடிப்பில் சைக்கோ படம் வெளியானது. தற்போது துக்ளக் தர்பார் படத்திலும் மீண்டும் மணிரத்னத்துடன் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்துள்ளார்.

அண்மையில் சமந்தா, சர்வானந்த் நடிப்பில் தெலுங்கில் ஜானு படம் வெளியாகி ஹிட்டானது. தொடர்ந்து இவர்களே அஜய் பூபதியாக மஹா சமுத்திரம் என்ற படத்தில் ஜோடியாக நடிக்கவுள்ளார்கள்.

இப்படத்தில் முன்பு அதிதி தான் நடிக்க இருந்ததாக அதிகாரப்பூர்வமில்லாத தகவல் சுற்றி வந்தன.

இந்நிலையில் மும்பையை மையமாக கொண்ட செய்தி ஊடகம் அதிதியின் தோல்வியினால் அவருக்கு பதிலாக சமந்தா நடிக்கிறார் என குறிப்பிட இதற்கு அதிதி மனவேதனையும் பதிவிட்டுள்ளார்.

இதில் அவர் இதை நேர்மையாக முக்கியத்துவத்துடன் சொல்லவேண்டும் என நினைக்கிறேன், வெற்றியோ தோல்வியோ ஒரு கலைஞரை நாசம் செய்துவிடாது, இதுபோன்ற நினைப்பை உற்சாகப்படுத்தாதீர்கள் என கூறியுள்ளார்.