பிரபல பொருளாதார மேதை அமார்த்யா சென்னின் மகள்தான் நந்தனா சென்.

இவர் தற்போது ஒரு நிர்வாணச் சிக்கலில் மாட்டியுள்ளார். ரங் ரசியா படத்தில் அவர் நிர்வாணமாக ஒரு காட்சியில் தோன்றியுள்ளார். இது சர்ச்சையாகியுள்ளது. ஆனால் அதில் என்ன சர்ச்சைக்கு உள்ளது என்று போல்டாக பேசுகிறார் நந்தனா சென்.

நிர்வாணமாக நடிக்க நானே கூச்சப்படவில்லை. ஆனால் அதைப் பார்த்து சிலர் கூச்சப்படுவதற்கு என்ன உள்ளது என்றும் அவர் கேட்கிறார். இதை கலையாக மட்டுமே பார்க்க வேண்டும். நிர்வாணமாக நடித்தாலும் கூட அதிலும் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும்.Nandana_sen_5

நான் பொறுப்போடுதான் நடித்துள்ளேன் என்பது எனது கருத்து என்று மேலும் விளக்குகிறார் நந்தனா.

ரங் ரசியா என்பது ஓவிய மேதை ராஜா ரவிவர்மாவின் கதையாகும். அதில் ரவிவர்மாவின் கலை தேவதையாக கருதப்படும் சுகந்தா என்ற பெண் பாத்திரத்தில் நடித்துள்ளார் நந்தனா சென்.

ரவிவர்மா தீட்டியுள்ள சுகந்தாவின் நிர்வாண ஓவியம் பிரபலமானது. அதுதொடர்பான காட்சியில்தான் நந்தனா நிர்வாணமாக போஸ் கொடுப்பது போல நடித்துள்ளார்.

இதில் நடிக்க நான் கூச்சப்படவே இல்லை. கலைக்காகத்தான் இதில் நடித்தேனே தவிர இதில் ஆபாசமாக எதுவுமே இல்லை.

எனது கணவர், குடும்பத்தாரிடம் கலந்து ஆலோசித்த பின்னரே இதில் நடித்தேன். எனவே இதில் மறைப்பதற்கு எதுவுமே இல்லை என்று கூறியுள்ளார் நந்தனா.

நந்தனா இலக்கியம் படித்தவர், அதுவும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில். படித்ததும் திரைப்படத் தயாரிப்பு மற்றும் நடிப்பில் இறங்கினார். 1997ம் ஆண்டு வெளியான கெளதம் கோஷின் குடியா படம்தான் நடிப்பில் இவரது முதல் படம்.

பின்னர் 2005ம் ஆண்டு சஞ்சய் லீலா பன்சாலியின் பிளாக் படத்தில் நடித்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெங்குவின் பப்ளிஷிங் நிறுவனத்தின் சிஇஓ ஜான் மேக்கின்சனை திருமணம் செய்து கொண்டார். தற்போது பெரும்பாலும் நியூயார்க்கில்தான் வசித்து வருகிறார்.

சினிமா, சிறார் உரிமை, எழுதுவது ஆகியவை தனது கண்களைப் போன்றவை என்று கூறும் நந்தனாவுக்கு பிடித்த நகரம் லண்டன்தானாம்.Nandana_sen_8

சுகதா கேரக்டர் குறித்து சிலாகித்துப் பேசுகிறார் நந்தனா. சுகதா அஞ்சாத மனம் படைத்தவள். அகன்ற கண்களை உடையவள். அப்பாவியான உள்ளம் படைத்தவள். அதேசமயம் ஒரு சாதாரண பெண்ணின் அனைத்து அபிலாஷைகளும் நிறைந்தவள். சீதை, திரவுபதி, சகுந்தலை ஆகிய பெண்களுக்கும், சுகதாவுக்கும் நிறைய வேறுபாடு இல்லை.இதுதான் என்னைக் கவர்ந்தது என்று கூறுகிறார் நந்தனா.

சுகதாவாக மாற நான் முதலில் சிரமப்பட்டேன். அவரது பாடி லாங்குவேஜ். சேலை கட்டும் விதம் உள்ளிட்டவற்றை அறிய நிறையப் படித்தேன். படத்தில் 9 கஜ சேலை கட்டி நடித்தேன். சுகதாவாக மாறிய பின்னர் அதை ரசித்தேன்.. என்னையே சுகதாவாக நினைத்துக் கொண்டேன் என்று கூறிச் சிரிக்கிறார் நந்தனா.

நிர்வாணம் என்பது மிகவும் சிக்கலான ஒன்று. அதிலும் பொறுப்பான தன்மை இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் அதில் எந்தக் குறையும் இல்லை. இது ஒரு கலையும் கூட. கலையை கலையாக மட்டுமே பார்த்தால் நல்லது. அப்போதுதான் அதை ரசிக்கத் தோன்றும். அப்படிப் பார்க்கத் தவறினால் ஆபாசமாகவே தோன்றும் என்பது எனது எண்ணம் என்று கூறி முடித்தார் நந்தனா.