இயக்குனர், நடிகர் பாக்கியராஜ் ரஜினிகாந்த், கமலுக்கு நிகராக சினிமாவில் பெயர் எடுத்தவர். இவரது மகன் நடிகர் சாந்தனு பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் கீர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

சமீபத்தில் கிர்த்தி பத்திரிக்கை இதழுக்கு பேட்டி கொடுத்திருந்தார். எங்களுக்கும் சாந்தனு குடும்பத்திற்கும் சிறுவயதிலிருந்தே தொடர்பு இருந்தது.

சாந்தனு அவரது அக்கா இருவரும் என் அம்மவிடம் தான் நடனம் கற்றார்கள். அப்போதெல்லாம் அவரது அப்பா அம்மாவை அங்கிள் ஆண்ட்டி என்று தான் கூப்பிட்டேன்.

என் வீட்டில் எப்படி இருந்தேனோ அதேபோலத்தான் இப்படியும் இருக்கிறேன். மாறவேண்டிய கட்டாயம் இல்லை. எனது மாமியார் தங்களை அம்மா, அப்பா என்றே கூப்பிடு என்று சொல்லிவிட்டார்.

உண்மையிலேயே எனக்கு அவர்கள் அப்பா, அம்மா மாதிரி தான். மாமனார் எப்போதும் வேலை, வேலையென பிசியாக இருப்பதால் யாரையும் தொந்தரவு செய்யமாட்டார்.

மாமியார் ஜாலியான டைப். அவருக்கு புது ஆடைகள் வாங்கவேண்டுமானால் என்னை தான் அழைப்பார். என்னிடம் பிடித்திருக்கிறதா என கேட்டுத்தான் வாங்குவார்.

நாத்தானாரும் ரொம்ப ஃப்ரண்ட்லி. சாந்தனுக்கு ட்ரஸ் செலக்‌ஷன் நான் தான். எனது ரசிகர்களும் என் மாமனாரை அப்பா என்று கூப்பிடுவதையே விரும்புகிறார்கள். சிலர் மாமனாரிடமே போன் போட்டே உங்களை அப்பானு சொல்ல சொல்லுங்க என்றே சொல்லிவிட்டார்கள்.

ஆக மொத்ததில் அவங்க எல்லாம் ஓகே. நான் நல்ல மருமகளா என்பதை நீங்கள் அவர்களிடம் தான் கேட்கவேண்டும் என கீர்த்தி பேட்டி கொடுத்தார்.