தளபதி 65 படத்தின் கதாநாயகி பாலிவுட் நடிகையா?

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தனது மாஸ்டர் படத்தில் மிகவும் கவனத்தை செலுத்தி வருகிறார்.

தளபதி 65 படத்தின் கதாநாயகி பாலிவுட் நடிகையா?
தளபதி 65

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தனது மாஸ்டர் படத்தில் மிகவும் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இப்படத்திற்கு பிறகு விஜய் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்ற கேள்வி தற்போது மிக வைரலாக சமூக வலைத்தளங்களில் போய் கொண்டு இருக்கிறது.

ஆம் இப்படத்தை இயக்குனர் சுதா கே பிரசாத் அவர்கள் இயக்க சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க போவதாக சில தகவல்கள் வெளியாகி இருந்தது. இப்படத்திற்கு ஜி.வி. தான் இசையமைக்க போகிறார் என்ற செய்தியும் கசிந்திருந்தது.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் மற்றும் டோலிவுட் நடிகையான பூஜா hegde விஜய்க்கு ஜோடியாக நடிக்க போகிறார் என்று சில தகவல்கள் கசிந்துள்ளது.

பூஜா hegde

இவர் இதற்கு முன்பு தமிழில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்பதனை அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை நான் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.