தளபதி 65 படத்தின் ஹீரோயின் ரஷ்மிகா மந்தனா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் டப்பிங் வேலைகளில் விஜய் முழு மூச்சாக இறங்கியுள்ளார் என்று தகவல்கள் வெளியானது.

தளபதி 65 படத்தின் ஹீரோயின் ரஷ்மிகா மந்தனா?
ரஷ்மிகா மந்தனா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் டப்பிங் வேலைகளில் விஜய் முழு மூச்சாக இறங்கியுள்ளார் என்று தகவல்கள் வெளியானது.

இப்படத்திற்கு பிறகு விஜய் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

அந்த வகையில் பிரபல பெண் இயக்குனர் சுதா கே பிரசாத் அவர்களின் இயக்கத்தில் தான் விஜய் அடுத்த படம் நடிக்க போகிறார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் இதனை குறித்து எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை.

இந்நிலையில் தற்போது விஜய்யின் 65வது படத்தில் பிரபல தெலுங்கு நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்க போகிறார் என்று சமுக வலைத்தளங்களில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது.

மேலும் விஜய்யின் 65வது படத்தை யார் இயக்க போகிறார் என்றதில் இருந்து யார் யார் நடிக்க போகிறார்கள் என்றது வரை அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.