ஜாக்பாட் திரைவிமர்சனம்

ராச்சசி படம் வந்து வெறும் ஒரு மாத இடைவெளியில் ஜோதிகாவின் அடுத்த படமான ஜாக்பாட் இன்று திரைக்கு வந்துள்ளது. ஜோதிகா, ரேவதி நடித்துள்ள இந்த படம் எப்படி இருக்கு வாங்க பார்ப்போம்.

ஜாக்பாட் திரைவிமர்சனம்
ஜாக்பாட் திரைவிமர்சனம்

ராச்சசி படம் வந்து வெறும் ஒரு மாத இடைவெளியில் ஜோதிகாவின் அடுத்த படமான ஜாக்பாட் இன்று திரைக்கு வந்துள்ளது. ஜோதிகா, ரேவதி நடித்துள்ள இந்த படம் எப்படி இருக்கு வாங்க பார்ப்போம்.

கதை:

அள்ள அள்ள குறையாத அக்ஷய பாத்திரம் பற்றிய அறிமுகத்துடன் ஆரம்பமாகிறது படம். அதை கண்டெடுக்கும் நபர்கள் அதை வைத்து விரைவில் பணக்காரர்கள் ஆகிவிடுகின்றனர்.

மற்றொருபுறம் ஜோதிகா மற்றும் ரேவதி இருவரும் ஜோடியாக பல தில்லாலங்கடி வேலைகள் செய்து சம்பாதித்து வருகின்றனர். வண்டிகளை திருடுவது, பொது இடத்தில் ஏமாற்றி பணம் வசூலிப்பது என குறுக்கு வழிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

ஒரு முறை அவர்கள் ஜெயிலுக்கு சென்றபோது அங்கு ஒரு பாட்டி தன்னிடம் அக்ஷய பாத்திரம் இருக்கிறது என்றும் அதை ஆனந்த்ராஜின் வீட்டில் குழி தோண்டி புதைத்து வைத்திருப்பதாக சொல்கிறார்.

அதை தேடி ஜோதிகாவும், ரேவதியும் கிளம்புகிறார்கள். அந்த பாத்திரத்தை ஆனந்த்ராஜை மீறி கைப்பற்றினார்களா என்பதை காமெடி கலாட்டாவாக காட்டியுள்ளது மீதி படம்.

படத்தை பற்றிய அலசல்:

ஜோதிகாவை கியூட்டான, தைரியமான வசனம் மட்டுமே பேசும் ரோல்களில் மட்டுமே பார்த்துவந்த நமக்கு இந்த முறை அவரை முழு ஆக்ஷன் அவதாரத்தில் காட்டியுள்ளனர். வழக்கம் போல தன்னுடைய நடிப்பில் ஜொலித்துள்ளார் ஜோதிகா.

நடிகை ரேவதிக்கு படம் முழுக்க ஜோதிகாவுடன் பயணிக்கும் ஒரு ரோல். ஜோதிகாவுக்கு ஈடாக ஒரு சில ஆக்ஷன் காட்சிகளிலும் கலக்கியுள்ளார் அவர். பவர் பாண்டி படத்தில் வயாதான் பெண்மணியாக நடித்த அவரா இப்போது இப்படி இருக்கிறார் என்ற ஆச்சர்யம் ரசிகர்களுக்கு நிச்சயம் வரும்.

நடிகர் ஆனந்த்ராஜை சீரியஸ் வில்லனாக எடுத்து கொள்ளமுடியவில்லை என்றாலும். அவர் பெண் வேடத்தில் இரண்டாவது ரோலில் வரும் மொமெண்ட்.. குபீர் சிரிப்பு கன்பார்ம்.

யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலி கான், டைகர் தங்கதுரை என படத்தில் வரும் அனைத்து நடிகர்களும் காமெடியில் பின்னி எடுக்கின்றனர்.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தவிர படம் முழுக்க தியேட்டரில் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிப்பதை பார்க்க முடிந்தது.

க்ளாப்ஸ்:

- நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காமெடி காட்சிகள்+வசனங்கள் தான் இந்த படத்தின் பெரிய பிளஸ். படத்தில் ஜோதிகா ரோல் உட்பட அனைத்து ரோல்கலும் அழுத்தமாக வடிவமைக்கப்படாவிட்டாலும், வெறும் காமெடியை நம்பியே பயணிக்கிறது திரைக்கதை.

- குறை சொல்ல முடியாத அளவு இருந்த ஒளிப்பதிவு.

பல்ப்ஸ்:

- படத்தின் ஸ்பீட் பிரேக்கர்களாக வரும் பாடல்கள்.

- காதை பதம் பார்க்கும் பின்னணி இசை. ஸ்கெட்ச் படத்தில் விக்ரமுக்கு வரும் தீம் மியூசிக்கை அப்படியே எடுத்து எப்படி இந்த படத்தில் ஜோதிகாவிற்கு பயன்படுத்தினார்கள் என்பது தெரியவில்லை? இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தான் பதில் சொல்ல வேண்டும்.

- அழுத்தம் இல்லாத கிளைமாக்ஸ்.

மொத்தத்தில் ஜாக்பாட் காமெடி கலாட்டா.இரண்டரை மணி நேரம் சிரித்துவிட்டு வரலாம்.