கழுகு 2 திரைவிமர்சனம்

கடந்த 2012 ல் சத்யதேவ் இயக்கத்தில் வெளியாகி காதலர்களின் மனம் ஈர்த்த படம் கழுகு. நல்ல விமர்சனங்களை பெற்ற இப்படம் தற்போது 7 வருடங்கள் கழித்து கழுகு 2 ஆக எட்டிப்பார்க்கிறது. கதைக்குள் கழுகு போல பார்வையிட்டு வட்டம் போடலாமா?

கழுகு 2 திரைவிமர்சனம்
கழுகு 2 திரைவிமர்சனம்

கடந்த 2012 ல் சத்யதேவ் இயக்கத்தில் வெளியாகி காதலர்களின் மனம் ஈர்த்த படம் கழுகு. நல்ல விமர்சனங்களை பெற்ற இப்படம் தற்போது 7 வருடங்கள் கழித்து கழுகு 2 ஆக எட்டிப்பார்க்கிறது. கதைக்குள் கழுகு போல பார்வையிட்டு வட்டம் போடலாமா?

கதைக்களம்

படத்தின் ஹீரோ கிருஷ்ணாவுக்கு குடும்ப பின்னணி என எதுவும் இல்லை. அவரும் அவரின் நண்பர் காளி வெங்கட் இருவரும் திருட்டு தொழிலில் ஈடுபடுபவர்கள். ஏதோ ஒரு விசயத்திற்காக அவர்கள் போலிசில் சிக்க கடைசியில் இருவரும் தப்பித்து விடுகிறார்கள்.

அப்போது இவரை வேட்டையர்கள் என நினைத்து கணக்குப்பிள்ளையாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் அவர்களை கொடைக்கானல் செந்நாய் உலவும் காட்டிற்கு அழைத்து செல்கிறார்.

பாஸ்கரின் மகளாக வரும் பிந்து மாதவி கிருஷ்ணா மீது காதல் கொள்கிறார். இப்படியே போகும் திருடர்கள் இருவரும் இணைந்து ஒரு அரசியல் வாதி வீட்டில் கைவரிசை காட்ட பெரும் ஆபத்து நேர்ந்து விடுகிறது.

கிருஷ்ணா தப்பித்தாரா, அவரின் நண்பர் என்ன ஆனார்? கிருஷ்ணா, பிந்து இருவரும் காதலில் இணைந்தார்களா என்பதே கதை.

படத்தை பற்றிய அலசல்

நடிகர் கிருஷ்ணா அழுத்தமான கதை கொண்ட படங்களை தேர்ந்துதெடுத்து நடித்து வருகிறார். அவருக்கு கழுகு படம் பெரிதும் கைகொடுத்தது. அதன் தொடர்ச்சியாக வந்திருக்கும் இந்த கழுகு 2 ல் அவரின் நடிப்பு ரியலான ஃபீல் தான்.

அதே வேளை அவரின் நண்பர் காளி வெங்கட்டுக்கு எப்படியான கதாபாத்திரம் என்பதை புரிந்துகொள்ளவே கூடுதல் நேரம் பிடிக்கிறது. ஆனாலும் அங்கங்கு சின்னச்சின்ன காமெடிகளை உருவாக்குகிறார். ஆனால் பெரிதளவில் ஒட்டவில்லையோ என தோன்றுகிறது.

ஹீரோயின் பிந்து மாதவி நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் முகம் காட்டியுள்ளார். பிக்பாஸ்க்கு பிறகு அவர் இப்போது தான் பலரின் கண்ணுக்கு தென்படுகிறார். கழுகு, கழுகு 2 இரண்டிலும் இவருக்கும் கிருஷ்ணாவுக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒத்துப்போகிறது.

காமெடி நடிகராக வலம் வரும் எம்.எஸ்.பாஸ்கர் படத்தில் குணச்சித்திர நடிகராக வந்துள்ளார். திறமையான நடிப்பை வெளிப்படுத்தும் இவர் எதிர்பாராத இடத்தில் முக்கிய டிவிஸ்ட் வைக்கிறார்.

யுவன்சங்கர் ராஜா வழக்கம் போல தன் விரல் வித்தைகளை காட்டுகிறார். அவருக்கே உரிய லவ் கீதம். அதிலும் மலைக்காட்டில் கடும் பனிக்குளிரில் பாடிய பாடல் ஹை சென்சேஷன்.

இயக்குனர் சத்யதேவ் கழுகு போல கழுகு 2 ஐ கொண்டுவர முயற்சித்திருக்கிறார். இதை வரவேற்கலாம். ஆனால் முதல் பாதி சற்று சலிப்பாக செல்வது போல தோன்றினாலும் இரண்டாம் பாதியில் கதையில் எதிர்பாராத ட்விஸ்ட் இருக்கிறது. இருந்த போதிலும் சுவாரசியம் தரும் நாட் இல்லையே இயக்குனரே.

கிளாப்ஸ்

ஹீரோ, ஹீரோயின் கேரக்டர்கள் ஆழமாக நடித்தது.

யுவன் குரலில் வந்த பாடல்கள் ஃபீல் குட் ரகம்.

படம் முழுக்க வரும் மலைக்காட்சிகளால் வனத்தில் இருப்பது போன்ற உணர்வு.

பல்பஸ்

முதல் பாதி எங்கு செல்கிறது என மிகவும் யோசிக்க வைத்தது.

கதையில் இன்னும் ஆழமான தாக்கம் கொடுத்திருக்கலாம்.

மொத்தத்தில் கழுகு 2 ஓகே. கழுகு போல சுவாரசியம் இல்லை என ஒரு ஃபீல்.