கீ திரைவிமர்சனம்

ஜீவா, நிக்கி கல்ராணி, அனைகா சோடி ஆகியோர் நடிப்பில் இன்று திரைக்கு வந்துள்ளது கீ. நீண்ட நாட்களாக ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வரும் ஜீவாவிற்கு இந்த படமாவது கைகொடுக்குமா? வாருங்கள் பார்ப்போம்.

கீ திரைவிமர்சனம்
கீ திரைவிமர்சனம்

ஜீவா, நிக்கி கல்ராணி, அனைகா சோடி ஆகியோர் நடிப்பில் இன்று திரைக்கு வந்துள்ளது கீ. நீண்ட நாட்களாக ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வரும் ஜீவாவிற்கு இந்த படமாவது கைகொடுக்குமா? வாருங்கள் பார்ப்போம்.

கதை:

இந்த படம் ஹேக்கிங் பற்றிய படம் என ட்ரைலர் பார்த்தே புரிந்திருக்கும். ஹேக்கிங் மூலம் பலருக்கும் பிரச்சனை கொடுக்கும் ஹேக்கர் வில்லனை எப்படி கண்டுபிடித்து பழிவாங்கினர் ஹீரோ என்பது தான் இந்த படத்தின் ஒன் லைன்.

ஜீவா, ஆர்ஜே பாலாஜி இருவரும் ஒன்றாக கல்லூரியில் படிக்கின்றனர். அனைத்து எக்ஸாமிலும் தோல்வி என்றாலும் ஹேக்கிங்கில் அதிக ஆர்வம் கொண்டு அதில் திறமையை வளர்த்துக்கொள்கிறார். காலேஜில் எக்ஸாம் நடக்கும் முன்பு கேள்வித்தாளை திருடுவது, பெண்கள் பற்றி தெரிந்துகொள்ள அவர்கள் போனை ஹேக் செய்வது என சில விஷயங்களுக்காக ஹேக்கிங் செய்துவருகிறார் ஜீவா. அதே நேரத்தில் காலேஜ் ஜூனியர் நிக்கி கல்ராணி உடன் காதல் செய்கிறார்.

ஆனால் மற்றொருபுறம் வில்லன் சிலரின் போன்களை ஹேக் செய்து அதில் உள்ள டேட்டாவை பயன்படுத்தி அவர்கள் மிரட்டி பணம் பறிப்பது, கொலை செய்வது, தூண்டிவிட்டு தற்கொலை செய்து கொள்ளவைப்பது என சில மோசமான விஷயங்கள் செய்துவருகிறார்.

அந்த வில்லன் குரூப்பை ஜீவா தேடி கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அதில் அவர் ஜெயித்தாரா இல்லையா என்பது தான் மீதி படம்.

படத்தை பற்றிய அலசல்:

ஜீவா வழக்கம் போல அவரது பங்கை சிறப்பாக கொடுத்திருந்தாலும் கதையில் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் போனதால் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. நல்ல கதையாக இருந்தாலும் அதை படமாக்குவதில் கோட்டை விட்டுவிட்டார் இயக்குனர்.

நிக்கி கல்ராணி தனக்கு கொடுத்த ரோலை கச்சிதமாக நடித்து முடித்துள்ளார். அனைக்கா சோடியை வெறும் கவர்ச்சிகாக மட்டுமே பயன்படுத்தியுள்ளார் இயக்குனர்.

 

படம் முழுவதும் ஹேக்கிங் பற்றி திரையில் காட்டப்பட்டது எதுவும் அழுத்தமாக இல்லாதது பெரிய மைனஸ். ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை வில்லன் செய்யும் பல விஷயங்கள் நம்பவே முடியாத அளவுக்கு தான் இருந்தது. செல்போன், வெப்கேம், ஏடிஎம், கம்ப்யூட்டர், கார், பேஸ் மேக்கர் என அனைத்தையும் நொடிப்பொழுதில் ஹேக் செய்துவிடுகிறார்.

ஹேக்கிங் செய்பவர்கள் அனைவரும் ஒரு 100" ஸ்க்ரீன் முன்பு அமர்ந்து தான் அனைத்தையும் செய்வார்கள் என்பது போல காட்டப்பட்டிருப்பது டூ மச்.

மேலும் படத்தின் கதையோட்டத்திற்கு பெரிய தடையாக இருந்தது ஜீவா மற்றும் அவரது அப்பா இடையேயான செண்டிமெண்ட் காட்சிகள் தான்.

ஆர்ஜே பாலாஜி செய்த காமெடி ஒரு சில தவிர எதுவும் எடுபடவில்லை. படத்திற்கு சம்பந்தமே இல்லாமல் தர்மகோல் மினிஸ்டர் முதல் விஜய் மல்லையா வரை அவர் பேசும் வசனங்களை இயக்குனர் எழுதி கொடுத்தாரா இல்லை ஆர்ஜே பாலாஜியே தன் முந்தைய படத்தில் இருந்து வசனங்களை எடுத்து பேசிவிட்டாரோ என்று தான் கேட்க தோன்றும்.

க்ளாப்ஸ்:

-விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை.

-தற்போது சமூகத்திற்கு தேவையான கதை

பல்ப்ஸ்:

- அழுத்தமே இல்லாத கதாபாத்திரங்கள் மற்றும் திரைக்கதை. வில்லன் பெயர் என்ன என்பது கூட படம் முடிந்து வரும் போது உங்களுக்கு ஞாபகம் இருக்காது.

- பல இடங்களில் லாஜிக் மீறல்கள்.

- ஹேக்கிங்கை சர்வ சாதாரண ஒரு விஷயம் போல போல காட்டியிருப்பது. ஜிமெயிலில் ஈமெயில் அனுப்புவது போல அது என்ன அவ்ளோ ஈஸியான விஷயமா?

மொத்தத்தில் இந்த படமும் ஜீவா கேரியரில் மற்றொரு பெரிய சறுக்கல் தான்.