அறம் 2வில் கீர்த்தி சுரேஷ்?
‘அறம் 2’ படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

‘அறம் 2’ படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழில் ரஜினியுடன் ‘அண்ணாத்த’, மலையாளத்தில் ‘மாராக்கர்’, தெலுங்கில் ‘மிஸ் இந்தியா’, ‘குட் லக் சக்கி’, ‘ரங்தே’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ். கரோனா ஊரடங்கில் இவருடைய நடிப்பில் வெளியாகவிருந்த ‘பெண்குயின்’ திரைப்படம், அமேசான் OTT தளத்தில் வெளியிடப்பட்டது.
தற்போது தான் நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு, கோபி நயினார் இயக்கவுள்ள ‘அறம் 2’ படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகின. நயன்தாரா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘அறம்’ என்பதால், ‘அறம் 2’ செய்தி வைரலாகப் பரவியது.
இது தொடர்பாக கீர்த்தி சுரேஷ் தரப்பில் விசாரித்தபோது, “முதலில் ‘அறம் 2’ படம் குறித்து யாருமே பேசவில்லை. ஆகையால், இந்தச் செய்தியில் உண்மையில்லை. மேலும், கீர்த்தி சுரேஷ் பல்வேறு படங்களில் நடிக்கவுள்ளார். இது தொடர்பான அறிவிப்புகள் கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் வெளியாகும்” என்று தெரிவித்தார்கள்






