எல் கே ஜி திரை திரைவிமர்சனம்

காமெடி நடிகர்கள் எல்லாம் தற்போது ஹீரோவாகும் ட்ரெண்ட் போல. சந்தானத்தை தொடர்ந்து தற்போது ஆர்.ஜே.பாலாஜியும் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள படம் தான் எல் கே ஜி. அதிலும் தனக்கு என்ன வருமோ, அதை புரிந்துக்கொண்டு பாலாஜி தன் ஸ்டைலிலேயே அரசியலை கலாய்த்துள்ள படம் தான் எல் கே ஜி. பாலாஜி தேர்ச்சி பெற்றாரா, பார்ப்போம்.

எல் கே ஜி திரை திரைவிமர்சனம்
எல் கே ஜி திரை திரைவிமர்சனம்

காமெடி நடிகர்கள் எல்லாம் தற்போது ஹீரோவாகும் ட்ரெண்ட் போல. சந்தானத்தை தொடர்ந்து தற்போது ஆர்.ஜே.பாலாஜியும் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள படம் தான் எல் கே ஜி. அதிலும் தனக்கு என்ன வருமோ, அதை புரிந்துக்கொண்டு பாலாஜி தன் ஸ்டைலிலேயே அரசியலை கலாய்த்துள்ள படம் தான் எல் கே ஜி. பாலாஜி தேர்ச்சி பெற்றாரா, பார்ப்போம்.

கதைக்களம்

லால்குடியில் ஒரு வார்டில் கவுன்சிலராக இருக்கும் ஆர் ஜே பாலாஜி தன் அரசியல் பயணத்தில் அடுத்தக்கட்டத்தை அடைய முயற்சி செய்து வருகிறார். அப்படியிருக்க அந்த ஊரில் ஒவ்வொரு வாக்கையும் பெற ஓடி ஓடி உழைக்கின்றார்.

தமிழக முதல்வர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றார். அந்த நேரத்தில் அரசியல்வாதிகளை ப்ரோமோட் செய்யும் ப்ரியா ஆனந்தின் உதவியுடன் பாலாஜி இந்தியா முழுதும் ட்ரெண்ட் ஆகின்றார்.

முதல்வர் இறந்த பிறகு இடைத்தேர்தல் வாய்ப்பு பாலாஜிக்கு வர, ஆனால், அவரை எதிர்த்து அதே கட்சியில் பெரிய ஆளாக இருக்கும் ஜே கே ரித்திஸ் மோதுகிறார். அதை தொடர்ந்து என்ன ஆகிறதே என்ற அரசியல் அதகளம் தான் இந்த எல் கே ஜி.

படத்தை பற்றிய அலசல்

ஆர் ஜே பாலாஜி முன்பே சொன்னது போல் தனக்கு என்ன வருமோ அதை அறிந்து சூப்பராக செய்துள்ளார். தன்னோட பலம் காமெடி என்பதை அறிந்துக்கொண்டு ஒரு காட்சி எமோஷ்னலாக ஸ்கோர் செய்தாலும் அடுத்த சீனே காமெடி கவுண்டர் கொடுத்து அதை மேட்ச் செய்து அசத்துகிறார்.

ப்ரியா ஆனந்த் கார்ப்ரேட்டில் வேலை செய்பவர், அமெரிக்காவில் ஒரு அரசியல்வாதிகளை ப்ரோமோட் செய்யும் விதம் தற்போது இந்தியாவிற்கும் வந்துவிட்டது, அந்த கம்பெனி நாங்கள் என்று சொல்லிவிட்டு, பாலாஜியை அவர்கள் ப்ரோமோட் செய்யும் விதம், ஒரு சிறிய வீடியோ கூட இன்றைய சூழ்நிலையில் எப்படி வைரல் ஆகி ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைக்கின்றது என காட்டும் விதம் அப்படியே நிழல் உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.

அரசியல் வாழ்க்கையில் யாரையும் தவறாக எடைப்போட முடியாது, முதலமைச்சரே ஓகே சொன்னாலும், கவுன்சிலர் மனது வைத்தால் தான் ஒரே ரோடே போட முடியும் என்று காட்டிய விதம், கவுன்சிலரை மதிக்காத பள்ளிக்கூடத்தின் கரெண்ட்டை கட் செய்து அவர்களை மன்னிப்பு கேட்க வைப்பது என பாலாஜி செய்யும் அரசியல் தந்திரங்கள் ரசிக்க வைக்கின்றது.

அதிலும் இடையிடையில் பேஸ்புக் லைவ் போகும் போது தளபதி-63 அப்டேட் கேட்பது, மைக்கில் பேசும் போது தல அஜித் வாழ்க என்பது என பல விஷயங்கள் இன்றைய இளைஞர்களின் மனநிலையை காட்டிய விதம் ரசிக்க வைக்கின்றது.

படம் முழுவதுமே அரசியலை தாக்கி தான் உள்ளது என்றாலும், சத்யராஜ் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சொல்வது போல் அனைத்து கட்சியையும் தாக்கி காட்சிகள் வந்திருக்க வேண்டும் அல்லவா? ஒரு கட்சியை மட்டுமே பலமாக தாக்கி கைத்தட்டல் பெறுவது என்ன நியாயம்?.

படத்தின் முதல் பாதி காமெடி, அரசியல் என அனைத்தும் கச்சிதமாக செல்ல, இரண்டாம் பாதி ஜே கே ரித்திஸுடனான மோதல் கொஞ்சம் தடுமாற, கிளைமேக்ஸ் அட என்னயா இது முதல்வன் படம் போல் பாலாஜி இவ்வளவு சீரியஸாக இருக்கிறாரே என நினைக்க, அங்கு வைத்த ஒரு காட்சி செம்ம கலக்கல்.

ஒளிப்பதிவு சிறிய பட்ஜெட் படம் என்றாலும் பல இடங்களில் சென்னையின் அழகை தெளிவாக படம்பிடித்து காட்டியுள்ளது, சென்னை மட்டுமில்லை, டெல்லியும் கூட, லியோன் ஜேம்ஸ் இசையில் எத்தனை காலம் தான் ஏமாறுவார் பாடல் ரசிக்க வைக்கின்றது, பின்னணியிலும் எந்த குறையும் இல்லை.

க்ளாப்ஸ்

படத்தின் பல காட்சிகள் நம் வாழ்வில் பார்த்த பல விஷயங்களை கலாய்ப்பது போல் இருப்பது உடனே படத்துடன் ஒன்ற வைக்கின்றது.

ஆர்.ஜே.பாலாஜி அட இவர் எப்படி இத்தனை பெரிய கதாபாத்திரத்தை தாங்குவார் என்று நினைத்தால், அசால்ட்டாக ஸ்கோர் செய்கிறார்.

படத்தின் கிளைமேக்ஸ்

பல்ப்ஸ்

நாஞ்சில் சம்பத் போன்ற ஒருவரை இவ்வளவு காமெடியாக பயன்படுத்துவது கொஞ்சம் உறுத்தல்.

இரண்டாம் பாதி சில நேரம் மட்டும் திரைக்கதை தடுமாறுகின்றது.

மொத்தத்தில் ர் ஜே பாலாஜி எல் கே ஜி முதல் அட்டம்ட்டிலேயே(attempt) பாஸ் செய்கின்றார்.